search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் மீட்பு"

    • தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி இந்திய கடல் பகுதிக்குள் நின்றது.
    • னவர்களை படகுடன் மீட்டு இலங்கை கடற்படை திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து சேகர் பாண்டி என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்த படகு நேற்றுமுன்தினம் இரவு தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் பழுதாகி நின்றது. இதன் இடையே நேற்று காலை வரை இந்த படகு மற்றும் மீனவர்கள் கரை திரும்பாததால் இந்த மீனவர்களை தேடி ஒரு படகில் 5 மீனவர்கள் தேடி சென்றனர். அப்போது பழுதாகி நின்ற ராமேசுவரத்தை சேர்ந்த படகு மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் கயிறு கட்டி இழுத்து வந்து தேடிச் சென்ற ராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் பழுதாகி நின்ற படகு மற்றும் 6 மீனவர்களையும் தேடி சென்ற மீனவர்கள் மீட்டு நேற்று மாலை கரைக்கு அழைத்து வந்தனர். இதுபற்றி படகு உரிமையாளர் சேகர்பாண்டி கூறியதாவது:-

    தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி இந்திய கடல் பகுதிக்குள் நின்றது. கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் படகானது இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. நேற்று அதிகாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் மீனவர்களை மீட்டு பாதுகாப்பாக ராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். மனிதாபிமானத்துடன் 6 மீனவர்களை காப்பாற்றி படகுடன் திருப்பி அனுப்பி வைத்த இலங்கை கடற்படைக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் படகு பழுதாகி இலங்கை கடல் பகுதிக்குள் நின்ற ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை படகுடன் மீட்டு இலங்கை கடற்படை திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவளம் கடற்கரையில் இருந்து 5 மீனவர்கள் இன்னொரு வள்ளத்தில் அவர்களை மீட்பதற்காக கடலுக்குள் விரைந்து சென்றனர்.
    • நடுக்கடலில் சுமார் 2 மணி நேரம் தத்தளித்து கொண்டு இருந்த 2 பேரையும் அவர்கள் உயிருடன் மீட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஸ்டன் (வயது 40). மீனவர். இவருக்கு சொந்தமாக வள்ளம் உள்ளது. அதில் கடலுக்கு செல்ல சின்னமுட்டம் கடற்கரைக்கு வள்ளத்தை கொண்டு சென்றார். வள்ளத்தில் ரஸ்டனும், அதே பகுதியை சேர்ந்த கமலஸ் (45) என்பவரும் இருந்தனர்.

    இன்று காலை 6.45 மணி அளவில் கோவளம் கடல் வழியாக சென்றபோது நடுக்கடலில் ராட்சத அலையில் வள்ளம் சிக்கி கவிழ்ந்தது.

    இதில் ரஸ்டனும், கமலசும் கடலில் விழுந்தனர். அவர்கள் 2 பேரும் வள்ளத்தை பிடித்தபடி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவளம் கடற்கரையில் இருந்து 5 மீனவர்கள் இன்னொரு வள்ளத்தில் அவர்களை மீட்பதற்காக கடலுக்குள் விரைந்து சென்றனர்.

    நடுக்கடலில் சுமார் 2 மணி நேரம் தத்தளித்து கொண்டு இருந்த 2 பேரையும் அவர்கள் உயிருடன் மீட்டனர்.

    பின்னர் 2 பேரையும் கவிழ்ந்து கிடந்த வள்ளத்தையும் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    • மாலையில் கரை திரும்ப வேண்டிய 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை.
    • காசிமேடு மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பைபர் படகில் மாயமான 4 மீனவர்களையும் தேடி வந்தனர்.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன், சக்தி, சம்பந்தம் ஆகிய 4 பேர் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    அவர்கள் வழக்கமாக 12 நாட்டிங்கல் மைல் தூரத்தில் மீன்பிடிப்பது வழக்கம். மாலையில் கரை திரும்ப வேண்டிய 4 மீனவர்களும் திரும்பவில்லை.

    இதனால் பதட்டம் அடைந்த தர்மலிங்கத்தின் மகன் சந்திரசேகர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதேபோல் மீன்வளத்துறை உதவி இயக்குனரக அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    காசிமேடு மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பைபர் படகில் மாயமான 4 மீனவர்களையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நடுக்கடலில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது பைபர் படகில் என்ஜின் பழுதால் கரை திரும்ப முடியாமல் தர்மலிங்கம், கமலநாதன், சக்தி, சம்பந்தம் ஆகியோர் தத்தளித்தபடி இருப்பதை கண்டனர்.

    இதையடுத்து அவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    ×